ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸ் மூலம் உயிரிழப்புகளின் உண்மை நிலவரத்தை, சில நாடுகள் உலக சுகாதார அமைப்பிடமே மறைப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேற்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் குறித்து, ஜெனிவாவில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் தலைவர்
டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:-
உலகளவில் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. அதனால் தான் நாம் எதிர்பார்த்ததை விட, அதிவிரைவாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
உலகளவில் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. அதனால் தான் நாம் எதிர்பார்த்ததை விட, அதிவிரைவாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
ஒரு சில நாடுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையான தகவலைத் வெளிப்படுத்தாமல் உள்ளனர். உயிரிழப்பு குறித்த தகவல்களையும் தருவது இல்லை. கண்களைக் கட்டிக்கொண்டு தீயை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, முழுவதுமாக அறியாமல், இந்த வைரஸ் பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் ஒரே செய்தியைத்தான் சொல்கிறோம். 'சோதனை செய்யுங்கள்... சோதனை செய்யுங்கள்... சோதனை செய்யுங்கள்' என்பதுதான் அது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா உயிரிழப்புகளின் உண்மை நிலவரத்தை, சில நாடுகள் உலக சுகாதார அமைப்பிடமே மறைப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மை நிலவரம் தெரியவந்தால், உலகம், உச்சகட்ட அச்சத்தை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.