ஊரடங்கு அமுலில் மலையக நகரங்கள் மற்றும் தோட்டங்களிவல் மயான அமைதி.




ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கோவிட் 19 என்ற கொரானா வைரஸ்சினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து மலையக நகரங்கள் முறு;றும் தோட்டங்களில் மயான அமைதி நிலவி வருகிறது.
இன்று காலை முதல் அத்தியவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் ஓரிரண்டு சேவையில் ஈடுப்பட்டன.நகரங்களில் பொலிஸ் மாத்திரம் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.
தோட்டத்துறையும் செயலழிந்து காணப்பட்டன் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் தொழிலாளர்கள் எவரும் வேலைக்கு செல்லவில்லை.
அத்தியவசிய தேவை கருதி பெற்றோல் நிரப்பு நிலையங்கள் ஒரு பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க திறக்கப்பட்டிருந்தன.
ஏனைய அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.இதே வேளை வைத்தியசாலைகளில் பணிகள் வழமை போன்று இடம்பெற்றன.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அவசர நோயாளர் பிரிவு வழமை போல இயங்கின.
இந்த காலப்பகுதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று சந்தேகத்துக்கிடமான எவரும் வரவில்லை என அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதே நேரம் நேற்று ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெரும்பாலானோர் மலையகங்களை நோக்கி வருகை தந்துள்ளமையினால் இந் நோய் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறு வருகை தந்தவர்கள் தங்களது குடும்பத்தின் நலன் கருதி 14 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு சுகாதார துறையின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலையக பகுதிகளுக்கு எந்த நோய் பரவுமேயானால் இத பாரிய அளவில் மிக வேகமாக பரவுவதற்கு வாய்ப்பிருப்பதனால் அனைவரும் அவதானமாக செயப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -