பின்னர், பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 6 மணிவரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பின்னர் நண்பகல் 12 மணிக்கு அமுலாகும். என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

