தேசிய ரீதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலமாக எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாக்கவேண்டும் .




அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள சதிகள் அனைத்தையும் முறியடித்து தேசிய ரீதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலமாக எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதற்கு முயல்கின்ற சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாக்கவேண்டும் .

இவ்வாறு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் அதன் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் அட்டப்பளம் ஒசாகா ரிசோட்டில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான குடும்ம ஒன்றுகூடலின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,

சிறுபான்மையினருக்கு இருக்கின்ற சவால்களை நினைத்துப் பார்க்கும்போது அரசியல் தலைமைகளும் ஊடகவியலாளர்களும் இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இந்த இக்கட்டான ஒரு காலகட்டத்தில் ஒருமித்த ஒரு கருத்துடனும் விட்டுக்கொடுப்புகளுடனும் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் . இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு என்பது தமது கடமைகளையும் பங்களிப்புகளையும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்கின்ற ஒன்றாக இருக்க வேண்டும்.

ஊடகவியலாளர்களின் பங்களிப்பு என்பது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும் போது கணவனையும் மனைவியையும் ஒன்றுசேர்த்து வைப்பது அல்லது நிரந்தரமாகவே அவர்களை பிரித்து விடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது போன்றதாகும்..
சாதாரண கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து நிரந்தரமான பிரிவிற்கு விட்டுச் செல்ல முடியும் அதேவேளை கடந்த காலங்களில் நடந்தவைகளை மறந்து அவர்களை ஒன்று சேர்க்கவும் முடியும்

இதைத்தான் ஊடகம் என்ற விடயமாக நான் பார்க்கிறேன் .இப்போது எங்களுக்கு தேவைப்படுகின்ற ஊடகம் என்பது எங்களுக்குள் இருக்கின்ற பிழைகளை களைந்து நாங்கள் எங்களுக்குள் இருக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுத்து எங்களுடைய எதிரிகளை ஒருவித அமைப்பில் ஒன்று சேர்த்து தான் பாயணிகக வேண்டிய முக்கிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். .தமிழ் மக்களின் அரசியலை உதாரணமாக காட்டிய காலம் இன்றுபோய் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக காணப்படக்கூடிய நிலமையொன்று இன்று ஏற்பட்டுள்ளது .சமூகத்தின் மத்தியில் தைரியமாக வந்து நாங்களே உங்கள் தலைவர்கள் என்று கூறி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளையும் நியாயங்களையும் காட்டி எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளை பேரினவாதிகளுக்கு தாரைவார்க்கின்ற ஒரு நிலைமை தற்போது அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் உருவாகி வருகின்றது.

முஸ்லிம் தலைமைகளுக்கிடையில் பலவிதமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டிய ஒரு கால கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் .

இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புகள் செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
அரசியல் எனது சுயகௌரவம் பலமுறை பாதிக்கப்பட்ட சந்தர்ப்பம் ஏற்பட்ட போதிலும் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகவும் இல்லை அந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதுமில்லை.நான் பிரதேச சபைத் தவிசாளராக , மாகாண சபை உறுப்பினராக,பாராளுமன்ற உறுப்பினராக வருவேன் என்று ஒரு நாள் கூட கற்பனை பண்ணி பார்த்தது கிடையாது ஆனால் இறைவன் அந்த பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தி தந்தான்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது சம்மாந்துறை நோக்கி தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகள் சிறுபிள்ளைகள் இன மத மொழி வேறுபாடின்றி வந்து சேர்ந்தார்கள் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து அடைக்கலம் கொடுத்தோம்.
தற்போது மிகவும் ஒரு ஆபத்தான சூழ்நிலைகள் பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய விதத்தில் நாம் செயற்படவேண்டும் விட்டுக்கொடுப்பு மிகவும் அவசியம் ஆகின்றது .இதய சுத்தியோடு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும். இப்போதிருக்கின்ற முஸ்லிம் தலைமைகள் எல்லோரும் ஒரே இடத்திலிருந்து பிரிந்தவர்கள் சிலர் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தும் உள்ளார்கள்
அம்பாறை மாவட்டத்தை நாம் வெற்றி கொள்ள வேண்டும் தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பை ஏற்படுத்த நான் என்றும் தயாராக இருக்கின்றேன் .ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூட எமது கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வது ஒரு பெரிய விடயமல்ல. சின்னச்சின்ன கணக்குகளைப் பார்த்து பெரிய பெரிய நிபந்தனைகளை வைத்துக் கொண்டு செல்லக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இன்று இல்லை பொதுபல சேனாவும் ஏனைய சிங்கள அமைப்புகளும் முஸ்லிம்களுக்கு எதிராக சில நடைமுறைகளை முன்னெடுக்கும் ஏற்பாடுகளை செய்தார்கள் ஆனால் தற்போது அமைதியாக இருக்கின்றார்கள் இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் சரியான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களுக்குத் தேவைப் படுகின்றது இதனை பெற்றுக் கொடுப்பதற்கு வசதியாக எம்மிடையே உள்ள சிலர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்து அவர்களை வெற்றியடையச் செய்து அவர்களின் இலக்குகளை அடைய துணைபோக இருக்கின்றார்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரித்துக் கொடுப்பதற்காக நம்மிடையே பலர் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் அதற்கான நியாயங்களையும் கூறியும் வருகின்றனர் இதில் மொத்தமாக முஸ்லிம் சமூகம் அழிந்து போவதற்கான ஒரு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகமாகவே உள்ளது இதற்கான தீர்வுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செய்யவேண்டும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்று சேர வேண்டும் .அனைவரையும் இந்த விடயத்தில் அரவணைக்க வேண்டும்
இந்த விடயத்தில் சாதகமான சாத்தியமான அமைப்பிலேயே ஒரு சேதமில்லாத விட்டுக்கொடுப்பு களைச் செய்து ஒருமித்த கருத்தோடு நாங்கள் எல்லோரும் களமிறங்கி எதிர்கால சமூகம் நிம்மதியாக வாழ நிதந்தரமான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை இன்று சிறுபான்மை இன மக்களுக்கும் வசதியற்ற சிங்கள மக்களுக்கும் தகுதியற்ற ஒரு நாடாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே இவ்வாறான நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் அடுத்த சந்ததிக்கு ஒரு சுதந்திரமான சந்தோஷமான நிம்மதியான நாட்டை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக எதிர்வரும் தேர்தலை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -