முன்னால் ஜோர்தான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி ஏ.எல்.லாபிர்
ஹஸ்பர் ஏ ஹலீம்-
இழந்த உரிமைகளை பெற்று அடைய வேண்டிய அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வோம் இதற்காக அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட முன்னால் ஜோர்தான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி ஏ.எல்.லாபிர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (02) இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது புதிய அரசியல் பயணம்,எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் களமிறங்கல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில் சமூக எழுச்சிக்கான பயணத்தில் இறங்கி சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் இதன் ஊடாக இந்த தற்போதைய அரசாங்கம் இன்னும் பத்து வருடங்களுக்கு பயணிக்கும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கையை பலப்படுத்துவதன் ஊடாக ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றியில் நாமும் பங்காளியாகலாம். "பழைய குருடி கதவை திறடி"என்கிற நிலை இல்லாமல் நிதானமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும்
அரசியல் என்பது எனக்கு புதுதல்ல 1974 களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பயணித்து ஆணிவேறாக செயற்பட்டவன் 1987 களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை கிண்ணியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதும் தான்தான்.
இலங்கை வெளிநாட்டு சேவையில் இணையும் முன்னரே அரசியலில் இருந்தவன் எனக்கு இருக்கும் நிருவாக திறமைகளை கொண்டும் சர்வதேச தொடர்புகளை கொண்டும் அபிவிருத்திக்காக அரசியலில் வியூகங்களை வகுத்து செயற்படவுள்ளோம். இராஜதர்திரியாக,தூதுவராக இருந்த அனுபவங்களை கொண்டு அரசியல் சுபீட்சத்துக்காக முன்னெடுத்துச் செல்லுவோம் .
அரசியல் பிரவேசம் என்பது புதிதல்ல தற்போது கிழக்கில் இருக்கும் ஆட்சி அதிகாரத்தினை கொண்ட அரசில் சிறுபான்மையின மக்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா மாத்திரமே விளங்குகாறார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மலரவிருக்கும் அமைச்சரவையில் அமைச்சராக வரவிருக்கிறார். தேசிய இன ஒற்றுமையை முன்வைப்பிற்காக கிழக்கில் இருக்கின்ற ஒரு அரசியல் ஞானியாக எமது கட்சியின் தலைமை அன்று தொடக்கம் இற்றை வரை ஆட்சி அதிகாரத்தில் உள்ள குடும்ப உறவுகளுடன் உறவாடுகிறார்.
காத்திரமான முன்னெடுப்புக்கள் எதிர்வுகூறல்களை முன்வைத்து தொடர்ச்சியான அரசியலை வழிநடாத்தி விட்டுத்தான் அரசியலை பயன்படுத்த வேண்டும் இம்முறை தேர்தலில் நாம் வெற்றிபெறுவது மக்களின் பாரிய வெற்றியாகும் என்றார்.
