பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மேற்பிரிவு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
இந்த விபத்து சம்பவமானது 03.03.2020.செவ்வாய்கிழமை விடியற்காலை 05.30மணி அளவில் இடம்பெற்றுள்ளது ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ கிவ்தோட்டபகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியே பொகவந்தலாவ டின்சின் பகுதியில் விட்டு விலகி சுமார் 20அடி பள்ளத்தில் பாாய்ந்து விபத்துக்குள்ளானது
அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதிக்கு பாதிப்புகள் இல்லாத போதும் முச்சக்கரண்டி கடும் சேதமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

