சிறுபான்மை வாழ்கின்ற எல்லா மாவட்டங்களிலும் இ.தொ.கா.இணைந்தும் தனித்தும் போட்டியிடும்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப தலைவரும். நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

டைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிறுபான்மை மக்கள் வாழுகின்ற எல்லா மாவட்டங்களிலும் இம்முறை பொது பெரமுன கட்சியுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உபதலைவரும். நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இன்று (16) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இம் முறை பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தலைவர் தொண்டமான் அவர்களுடன் முன்னாள் மத்திய மாகாண சபை தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி,ரமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணகபதி கணகராஜ்,பிலிப்குமார், பழனி சத்திவேல்,ஆகிய ஐந்து பேர் நவரெலியா மாவட்டத்திலும்,கண்டி மாவட்டத்தில் அருள்சாமி பரத்,ஊவா மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் அவர்களும் நுவரெலியா,பதுளை,கண்டி ஆகிய மாவட்டங்களில் இணைந்தும் ஏனைய சிறுபான்மை மக்கள் வாழுகின்ற மாவட்டங்களில் சிறுபான்மை கட்சிகளை சேர்த்துக்கொண்டு தனித்து போட்டியிட உள்ளன.
ஏனை மாவட்டங்களில் எந்ததெந்த கட்சிகளை இணைத்து கொண்டு போட்டியிடுவது என்பது தொடர்பாக தற்போது கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் இறுதி முடிவினை தலைவர் தொண்டமானே எடுப்பார்.ஏனைய மாவட்டங்களில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு கருதி இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிறுபான்மை மக்கள் வாழுகின்ற எல்லா மாவட்டங்களிலும் போட்டியிட உள்ளன.அவர்கள் அனைவரையும் இணைத்து செல்ல வேண்டிய கடமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸூக்கு இருப்பதாலும் இந்த தேர்தலை சாதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த மக்களை பாதுகாப்பதற்காக இம்முறை போட்டியிட உள்ளது.இதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஐந்து பேரும் வெற்றிப்பெருவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் இதனை மத்திய மாகாண சபை தேர்தலில் நிரூபித்து காட்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -