அமெரிக்கா முழவதும் கொரோனா வைரஸ, ஏப்ரல் இறுதிக்குள் மருந்து தயார்: அமெரிக்கா ஜனாதிபதி.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சீனாவில் பல ஆயிரம் பேரை உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. மேலும் அமெரிக்காவில் மட்டும் கொரோன வைரசுக்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்கர்கள் கடுமையான பயத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வோஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்த போது கூறியதாவது:
நாட்டின் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி, அதனை அழித்தே தீருவோம். கொரோனா வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையை துவங்கியுள்ளோம்.

மருந்து மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அடுத்த மாதம் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள அமெரிக்கர்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -