27ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவை. சந்தேகத்திற்கிடமானவர் நடமாடினால் அறிவிக்கவும் பிரதேச செயலாளர் ஜெகராஜன் அறிவிப்பு.


காரைதீவு சகா-
கொரோனா அச்சம் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதேசசெயலகங்கள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டசேவைகளை வழங்கும்.
அதுவரை மக்கள் பிரதேசசெயலகம் வருவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அதுதொடர்பானஅறிவுறுத்தல் பதாதைகள் செயலகமுன்றலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொங்கவிடப்பட்டுள்ளது.
கிராமத்தினுள் புதியவர்கள் சந்தேகத்திற்கிடமானவர்கள்நடமாடினால் உடனடியாக அறிவிக்கவேண்டும் என கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை காரைதீவு பிரதேசசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அலுவலகம் நுழையமுன்பு செயலகமுன்றலில் அமைத்த கைகழுவும் இடத்தில் கைகழுவிவிட்டு கிராமசேவையாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதேவேளை காரைதீவு கடற்கரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய வெளிநாட்டு வெள்ளைக்காரரொருவர் பற்றியதகவல் கிடைத்ததும் காரைதீவு கடற்படையினரிடன்பிரதேசசெயலாளர் அறிவித்ததும் அவர்கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -