கொரானா தொற்று இலங்கை பிரஜைகளுக்கு ஏற்பட்டதனை தொடர்ந்து இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் சுகாதார நிறுவனங்களும் பல்வேறு திடடங்களை மேற்கொண்டு வருகின்றன. அதற்கமைவாக கடந்த 13 திகதி பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று அரசாங்கம் அரச நிறுவனங்களுக்கும் வங்கிகள் உட்பட பல நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்ததுடன் பொது மக்கள் அத்தியவசிய தேவைகளுக்கன்றி ஏனைய காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டதற்கமைவாகவும், காரோனா பீதி காரணமாகவும் இன்று மலையக நகரங்களில் சன நடமாற்றம் மிக குறைவாகவே காணப்பட்டன.
இதனால் பொது போக்குவரத்து சேவைகள் பாதிப்புக்குள்ளாகின மலையக புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெற்ற போதிலும் புகையிரதங்களில் 15 ,20 பேரை பயணித்தாக மலையக புகையிரத நிலைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
புகையிரத நிலையங்களும் விரிச்சோடி காணப்பட்டன.பஸ் தரிப்பு நிலையங்களில் மிகவும் குறைந்த அளவு மக்களே வருகை தந்திருந்தன இதனால் பல தனியார் பஸ்கள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
மலையக நகரங்களில் சன நடமாற்றம் குறைந்ததன் காரணமாக பல கடைகள் மூடப்பட்டிருந்தன.
கோரான பீதி காரணமாக நடைபாதை வியாபாரிகள் மற்றும், வர்த்தககர்கள், பஸ் உரிமையாளர்கள், உட்பட அனைத்து பிரிவினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.