மத்திய மாகாண சனச கூட்டுறவு சங்கத்தில் கடன்பெற்ற கல்விச்சேவையாளர்களிடமிருந்து கடன் அறவிடப்படமாட்டாது.


சனச கூட்டறவு சங்கத்தின் தலைவர் வை.எம்.எச்.பண்டார தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
மத்திய மாகாண சனச கல்விச்சேவையாளர்களின் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கல்விச்சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் பெற்றுக்கொண்ட கடனுக்கான தவணைக்கட்டணங்கள் எதுவும் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் அறிவிக்கும் வரை அறவிடப்படமாட்டாது. என அச்சங்கத்தின் தலைவர் வை.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவியதனை தொடர்ந்து அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களிடம் கடன் அறவிடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் கூட்டுறவு சங்கங்களின் கடன் அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் அதில் குறிப்பிடவில்லை. எனினும் ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வி சேவையில் உள்ளவர்கள். தங்களது சேவைக்காலத்தின் போது வீடு கட்டுவதற்கோ, காணி வாங்குவதற்கோ கடன்களை பெற்றுதான் தங்களுடைய அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பலருடைய சம்பளம் கடனுக்காகவே செலுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் மேலதிக வகுப்புக்களையும் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுமே தங்களுடைய வாழ்வாதாரத்தினை ஈடுசெய்து வந்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அவசர கால சூழ்நிலை காரணமாக வேறு எந்த வருமானமும் பெற முடியாது. உள்ளதால், கடந்த வாரம் கூடிய பணிப்பாளர் சபை இக்கடனுக்கான தவணைக்கட்டணங்களை நிலைமை சீரடையும் வரை அறவிடுவதில்லையென முடிவுசெய்து அதற்கான கடிதங்களையும் வலயங்களிலுள்ள கணக்காளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏபN;ரல் மாதம் அங்கத்துவ தொகை மாத்திரமே அறவிடப்படும் ஏனைய எந்த தொகையும் அறவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது ஒரு சில தொழிற்சங்கங்கள் தங்களது அங்கத்துவர்களை பெருப்பிப்பதற்காக சமூக ஊடகங்கள் மூலமாக தங்களுடைய தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சனச கூட்டுறவு சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பரப்பிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது. நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை தொழிற்சங்கங்களோ தனிநபர்களோ தங்களது சுயநலத்திற்காக செயற்படுவது தவறான செயற்பாடாகும.; ஆகவே சுயநலம் பாராது இந்த சூழ்நிலைக்கு முகங்கொடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதனூடாக சங்கங்களுக்கிடையிலேயோ நபர்களுக்கிடையிலேயோ பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது என அவர மேலும் தெரிவித்தார்.
இது குறித்த அச்சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் க.சுந்தரலிங்கம் கருத்து தெரிவிக்கையில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையினை கருத்தில் கொண்டு நான் உட்பட இன்னும் பணிபாளர்கள் சிலர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே கடந்த வாரம் அவசரமான ஒரு பணிபாளர் சபை நடைபெற்றது அதில் தற்போது ஆசியர்கள்,அதிபர்கள்,.பணிப்பாளர்கள்,கல்வி சேவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆராயப்பட்டன.
இதன் போது தற்போதுள்ள நிலையில் கடன் அறிவிடப்பட்டால் அவர்களுக்கு வாழ்தார பிரச்சினைகள் உக்கிரமடையும் என்பதனால் ஏப்ரேல் மாதம் முதல் இந்த கடன் அறிவிடப்படுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை வலயக்கல்வி பணிமனைகளுக்கு தற்போது தபால் போக்குவரத்து இல்லாததனால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தற்போது ஒரு சில வலயங்களிலிருந்து சாதகமான பதிலும் எமக்கு அளிக்கப்பட்டுள்ளன.என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -