அட்டன் பொகவந்தலா பிரதான வீதியில் இருவேறு விபத்துக்கள் இடம்பெற்றதில் அரச பஸ்ஸில் சிறுவன் ஒருவன் மோதுண்டு காயமடைந்துள்ளதுடன் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதுண்டு விமத்துகக்குள்ளனதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
ஹட்டனில் அளுத்கால பகுதியிலே 07/03 மாலை 05 மணியவில் இவ் விபத்துகள் இடம்பெற்றுள்ளது
அட்டனிலிருந்த டிக்கோயா பகுதிக்கு வந்த காரும் நோர்வூட் பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற காரை பின்னால் சென்ற கார் பாரிய வளைவு ஒன்றில் முந்திச்செல்ல முற்பட்ட போதே மூன்று கார்களும் ஒன்றோடொன்று மோதுண்டுள்ளது விபத்தையடுத்து அட்டன் பொகவந்தலா வீதி சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்த வேலையில் அதே இடத்தில் அட்டனிலிருந்து நல்லத்தண்ணி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அட்டன் டிப்போவுக்கு சொந்தமான அரச பஸ்ஸில் பாதையை கடக்க முற்பட்ட டிக்கோய தோட்டத்தை சேர்ந்த 08 வயது சிறுவன் மோதுண்டு காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பஸ்ஸின் சாரதியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்


