கொட்டகலை அருள்மிகு வூட்டன் ஹில் முத்துமாரியமன் அம்மன் மாசிமக தேர்த்திருவிழா இன்று (07) பக்த அடியார்கள் புடைசூழ வேத வாத்தியங்கள் முழங்க சிறப்பாக இடம்பெற்றன.
விசேட வசந்த மண்டப பூஜையுடன் சண்டியா ரூபினியாக அம்பிகை எழுந்தருளி உள்வீதி வலத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரிவில் வெளி வீதி வலம் வந்து ரொசிட்டா நகர் வரை சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்த.
இத்தேர் திருவிழாவில் கலை கலாசார அம்சங்கள்,மேளதாள வாத்தியங்கள் ஆகியன இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பிரயாசித்த அபிசேகம்,நடைபெற்று அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
நாளை ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உட்சவம் நடைபெற்று நாளை மறுதினம் வைரவர் மடையுடன் இத்தேர் திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளன.