அம்பாரையில் மரத்துடன் இணைந்து மயில் செல்லவில்லை என்றால் மரம் படுதோல்வியடைவது உறுதி..


அபு மபாஸ்-

டைபெறவவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு முறையும் இல்லாதளவு இம்முறை தோல்வியைச் சந்திக்கவுள்ளது.

இத்தோல்விக்கு காரணம் மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அசமந்தப்போக்கும் ஊர் மத்திய குழுக்களின் வியாபாரம் மற்றும் தலைவரின் பொய்யான வாக்குறுதிகளுமே என்பதனை கட்சி வட்டாரம் நன்கு உணர்ந்துள்ளன.

அத்துடன் இந்த தோல்வியை சமாளித்து வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் பலமடைந்து வரும் மயில் கட்சியை அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை மரத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த கால தேர்தல் மேடைகளில் மயில் கட்சியின் தலைவர் மரக்கட்சியின் தலைவரால் மிக மோசமாக கழுவி ஊற்றிய கதை வேறுள்ளது. அதனை மறைந்து மறந்து இன்று அம்பாரையில் மயில் கட்டாயம் இணைந்து தேர்தல் கேட்க வேண்டும் என்று இன்று (16) அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையினை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தையும் நடாத்தியுள்ளனர்.

குறித்த சமரசப் பேச்சுவார்த்தை எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் தனித்தே களமிறங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அம்பாரை மாவட்ட மயில் கட்சி முக்கியஸ்தர்களும் களமிறங்கும் வேட்பாளர்களும் உள்ளனர். 

அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடும் சஜீத் பிரமதாச அணியுடன் இணைந்து போட்டியிட தீர்மாணித்துள்ளனர்.

அப்படியானால் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அரைவாசி வேட்பாளர்களை களமிறக்க நேரிடும். கடந்த தேர்தல்களில் மூன்று தொகுதிகளிலும் மூன்று வேட்பாளர்களையே களமிறக்கி இலேசாக வெற்றி கண்ட மரக்கட்சியினர் இம்முறை இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்டு மயிலின் காலைப்பிடித்து கெஞ்சித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளன.

அத்துடன் மரக்கட்சிக்கு மாவட்டத்தில் இருக்கும் 75 ஆயிரம் வாக்குகளினால் மூன்று வேட்பாளர்களை நிறுத்தி அதிகூடிய தெரிவு வாக்குகளைப் பெறவைக்கும் முயற்சியில் கட்சி ஈடுபட்டால் கூட்டுச் சேர்க்கும் மயிலோ சஜீத் அணியின் அம்பாரை வேட்பாளர்களோ தோல்வியைத் தழுவும் அவல நிலை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டே மரம் மயிலை கெஞ்சி அழைக்கின்றனர்.

ஆனால் மயில் மரத்துடன் இணையுமா இல்லையா இன்றுடன் தீர்வு வந்தாலும் மரத்துடன் இணைய மாட்டோம் என்பதில் மயில் உறுதியாய் உள்ளதுடன் சமரசத்துக்கு அழைத்தும் வரவில்லை என்ற பழிச்சொல்லை எடுக்காது இருக்கவே பேச்சுவார்த்தைக்குச் சென்றுள்ளதாக மயிலின் இறக்கைகளில் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் எப்படித்தான் கஸ்டப்பட்டு ஓடினாலும் மரம் இத்தேர்தலில் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் என்று அதிக கருத்துக்கள் கூறப்பட்டாலும் குதிரையணியினர் மொட்டுக்கட்சியில் சேர்ந்து கேட்கும் நிலை உறுதியானதால் மாவட்டத்தில் அவர்களே வெற்றி பெறும் நிலை உள்ளன. ஆகவே தொலைபேசியும் மரமும் சேர்ந்து இரண்டு ஆசனங்களையே பெற்றுக்கொள்ளும் என்பது தேர்தல் கள நிலவரச் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -