எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு.!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- 

லக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக குறைவடைந்துள்ளமையை அடுத்து அதன் நன்மைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று கூறி வந்த அரசாங்கம் தற்போது மாற்று திட்டமொன்றை அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட குறைவை அடுத்து இலங்கையில் எரிபொருட்களின் விலையை குறைக்காமல் அதற்கு பதிலாக அதன் பயன்களை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்போவதாக போக்குவரத்து , மின்சசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்,
வழமையாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்படும் குறைவு பொதுமக்கள் அனைவருக்கு சென்று சேர்வதில்லை.

எனவேதான் இந்த தடவை இந்த நன்மை பாரியளவு மக்களை சென்றடையும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -