தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஒழுங்கு செய்திருந்த வருடாந்த ஊடக குடும்ப ஒன்று கூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டப்பள்ளம் ஒசாகா ரிசோட்டில் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை , நிந்தவுர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.தாஹிர் ( அஸ்றப்) , சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் , அக்கரைப்பற்று சிமாட் சிற்றி முகாமைத்துவ பணிப்பாளர் முஹம்மது ஹம்தூன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ஊடக குடும்பத்தைச் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் , இசை நிகழ்வுகள் ஊடகவியலாளர்களுக்கான புதிய ரீ சேட் அறிமுகம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.








