தற்போது நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கமும் சுகாதார பிரிவினரும் செய்து வருகின்றனர். இந் நிலையில் சில தனியார் நிறுவனங்கள் தனிநபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்து வருகின்றனர். இதற்கிணையாக கொட்டகலை சாந்திபுர நலன்புரி சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பிரதேசத்திற்கு வரும் அனைவரும் கைகழுவிட்டு வருவதற்கு ஒரு கைழுவும் குழாய் ஒன்றி ஊருக்கு நுழைவாயில் வாயில் செய்து கொடுத்துள்ளனர்.
நாளை தினம் ஊரடங்கு தளர்த்திய உடன் பெரும் எண்ணிக்கையான மக்கள் நகரங்களுக்கு சென்று வருவதனால் வைரஸ் கிருமி பரவுவதனை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பொது நல செயத்திட்டம் இங்கு வாழும் பொது மக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.