கே.சுந்தரலிங்கம் -
அரசாங்கம் இன்று கொரோனா என்ற வைர்ஸினை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இதற்காக இன்று ஊரடங்கு சட்டத்தினையும் பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பதற்கு முன் வசதி படைத்தவர்கள் தங்களது குடும்பத்திற்கு தேவையான அத்தனை பொருட்களையும் ஒரு மாத காலத்திற்கு வாங்கி வைத்துக்கொண்டார்கள்.
ஆனால் வறுமையில் வரட்சியிலும் பாதிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் பட்டினியில் சாகும் நிலை உருவாகியுள்ளது.இது கொரோனா பாதிப்பினை விட பாராதூரமானது எனவே ஐம்பது அறுபது வருட காலம் சந்தா பணம் பெற்றுக்கொண்ட தொழிற்சங்கங்களும் இவர்களிடம் இருந்து காலம் காலமாக வறுமானம் பெற்ற கம்பனிகளும் என்ன செய்யப்போகின்றன? என ஐக்கிய சுதந்திர கட்சியின் பொது செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவரது வீட்டில் .இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் வைரஸ் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் வைரஸ் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
ஆனால் தொழிலாளகள் வறுமையிலும் வரட்சியிலும் பாதிக்கப்பட்டுள்ளதனால் அவர்களுக்கு இதனை பெற்றுக்கொள்ள கூட பணமில்லை இந்நிலையில் தொழிற்சங்கள் பல வருடகாலமாக அறவிட்ட அங்கத்துவ பணத்திலிருந்து ஒரு பகுதியினயாவுது தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க பெற்றுக்கொடுக்க வேண்டும். அதே வேளை இத்தனை காலம் இவர்களின் உழைப்பில் வாழ்ந்த கம்பனிகள் இவர்களுக்கு அத்தியவசிய பொருட்களையாவுது நிவாரணமாக வழங்க முன்வர வேண்டும்.
மலையகப்பகுதிகளை எடுத்து கொண்டால் வைரஸ் தொற்றினை விட மிக பின் தங்கிய சமூகமாக நாங்கள் இன்னும் இருந்து வருகிறோம். இவ்வாறான ஒரு நிலையில் நாங்கள் இப்போது பாரிய ஆபத்தான நிலையில் இருக்கிறோம்.வைரஸ் பாதிப்பில் இறப்பதை விட பட்டினியில் இறக்க வேண்டிய தொகை அதிகமாக காணப்படுகின்றது.
அரசாங்கம் இன்று பொலிசாரனையும் இரானுவத்தினரையும் அரச ஊழியர்களையும் இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்காக பொதுவான வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது இவ்வாறான ஒரு சூழ்நிலை மலையக தலைமையிகள் இவர்களை காப்பாற்றுவதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.ஆகவே இவர்களுக்கு குறைந்தது அத்தியவசிய பொருட்களையாவுது பெற்றுக்கொடுக்க முன் வர வேணடும் என அவர் மேலும் தெரிவித்தார்.