கொரோனாவால் செர்ரி பூக்களை ரசிக்க மறந்த ஜப்பானியர்கள்!





எம்.ஜே.எம் பாரிஸ்-

ப்பானில் March மாதம் தொடக்கம் முதல் May மாதம் வரை வசந்த காலமாகும். தற்போது ஜப்பானில் வசந்த காலம் நிலவி வருவதால் செர்ரி பூக்கள் அதிகளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. புகுவோகா, ஒஷாகா, நகோயா, டோக்கியோ, சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகரங்களிலுள்ள பூங்காக்களில் செர்ரி பூக்கள் பூக்க தொடங்கிவிட்டது.

இந்த நிகழ்வை காண ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் பூங்காக்களுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனாவால் பூங்காக்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

இந்த நிலையில் அங்கு விடுமுறை விடப்பட்ட பாடசாலைகளை விரைவில் திறக்க ஜப்பானிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பானில் கொரோனாவால் பாதிப்பு சற்று குறைவுதான் என்றாலும், இந்த வருடம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மையான தகவலை ஜப்பான் அரசாங்கம் மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -