வெலிமடையை சேர்ந்த ஒரு சகோதரர் க.பொ.த.சாதரண தரப் பரீட்சை எழுதிவிட்டு நாற்பது நாள் ஜமாத் சென்றுள்ளார் அதில் முதல் பயணமாக கொழும்பு மர்கஸூக்கு சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த நாட்களில் ஒரு வயதான மனிதர் மர்கஸ் பள்ளிவாயல் மலசல கூடத்தை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த சகோதரர் இவர் பள்ளிவாயல் முஅத்தினாரோ என்று நினைத்து விட்டார் பின்பு ஒரு முறை இவரை அழைத்து வந்த அமிர் சாப் ஒருவர் இங்கு சுத்தம் செய்யும் நபர் யார் என்று தெரியுமா என்று வினவ தெரியாதே என்று சகோதரர் பதிலளிக்க இவர்தான் நோலிமிட் ஓஃனர் முபாரக் ஹாஜியார் என்று பதிலளித்துள்ளார். இவர் உடனே வாயடைத்து போயுள்ளார்.
முபாரக் ஹாஜியார் என்பவர் யார் இலங்கையிலுள்ள மிகப்பெரும் ஆடை காட்சியமாக திகழும் நோலீமிட் நிறுவனத்தின் பணிப்பாளர் அவரின் நிறுவனத்துக்கு பத்துக்கு மேற்பட்ட கிளைகள் இலங்கையில் வட, கிழக்கை தவிர ஏனைய மாகாணங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றது.
இன, மத,பேதமின்றி பல்லின மக்கள் வாழும் எம் தேசத்தில் ஆயிரக்கணக்கான சகோதர,சகோதரிகள் அவரின் நிறுவனத்தில் வேளை பார்க்கின்றனர் இருந்தும் அவர் பெருந் தன்மையுடன் எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தும் இறைவனின் திருப் பொருத்தம் வேண்டி அல்லாஹ்வின் மாளிகையை துப்பரவு செய்வதானது ஏனைய பணக்கார சமூகத்துக்கு நல்லதொரு முன்னுதாரணமாகும்.
நான் கத்தார் நாட்டில் பணி புரிகின்ற கால கட்டத்தில் மாற்று மத சகோதரர் ஒருவர் என்னிடம் கூறினார் அவர் கத்தாரிலுள்ள லூலூ மோலில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணி புரிகின்ற போது ஒரு முறை அவ்நிறுவனத்தின் ஓஃனர் யூசுப் அலி அவர்கள் குறிப்பிட்ட சொப்பிங் மோலை பார்வையிட வரும் போது ஒரு துப்பரவு தொழிலாளி அவரை கண்டு பயந்து ஒழிந்து கொண்டானாம் அதனை அவதானித்த யூசுப் அலி அவர்கள் உடனே அத் துப்பரவுத் தொழிலாளியை அழைத்து ஏன் எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள் நான் உங்களைப்போன்ற ஒரு சாதரண மனிதன் நீங்கள் என் நிறுவனத்தில் தொழில் புரிகிறீர்கள் அதற்கான ஊதியம் உங்களுக்கு கிடைக்கின்றது என்று சர்வசாதரணமாக கூறி விட்டு குறிப்பிட்ட பணத்தொகை ஒன்றையும் துப்பரவுத் தொழிலாளியின் கையில் வைத்து விட்டு சென்று விட்டாராம்.
மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று வந்த யாருக்கும் லூலூ என்றால் தெரியாமல் இருக்காது அந்தளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலும்,ஐரோப்பியாவிலும்,ஆசிய நாடுகளிலும் வியாபரம் ஜொலிக்கும் மிகப் பெரும் வர்த்தக சாம்ராஜ்யமாகும்.
ஆனால் அதன் ஓஃனர் எவ்வளவு பணிவாகவும்,கண்ணியத்துடனும் தனது தொழிலாளியுடன் நடந்து கொள்வதானது இஸ்லாம் காட்டிய வழிமுறையாகும் இதனை ஏனைய அதிகார பதவிகளில் இருந்து கொண்டு மக்களை ஆட்டிப்படைக்க நினைப்பவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: இவ்விரண்டு சம்பவங்களும் கற்பனையல்ல இருந்தும் எந்தளவுக்கு உண்மையென்றும் தெறியாது ஆனால் என்னிடம் கூறியதை நீ்ங்களும் அறிய வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன்.
