கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 46 வயதுடைய இலங்கைப் பெண்னுடனான உரையாடல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடியுள்ளார்.

அவர் சகோதர மொழியில் தெரிவித்த விடயங்கள்...
எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை சென்று சிகிச்சைப் பெற முயற்சித்தேன்.

அந்த சந்தர்ப்பத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை வைத்தியர்கள் அறிவித்தனர். இத்தாலி நாட்டிற்கு வந்து சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்டன. நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தார்கள். அவர்களிடமிருந்து எனக்கும் தொற்றியதாக எனக்கு அறியக் கிடைத்தது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அந்த பெண் பிரிதொரு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். என்னை பார்வையிடுவதற்கு எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 46 வயதுடைய இலங்கைப் பெண்ணுடன்  இலங்கை அதிகாரியொருவர் உரையாடியபோது கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஏனைய தரப்பினர் குறித்த பெண் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கையிலிருந்து உரையாற்றிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் அனைவரும் நீங்கள் நலம்பெற வேண்டுமென்பதில் அக்கறையுடன் அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர் என்றும், ஆகையினால் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் உரையாடிய இலங்கை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகின் பல நாடுகளை கொரேனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த வைரஸின் தாக்கம் சீனாவில் தற்போது குறைந்து வந்தாலும் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இத்தாலி தென்கொரியா போன்ற நாடுகளில் அதிக இறப்புகள் பதிவாகின்றது.

இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றது.

பெப்ரவரி 11 ஆம் திகதி நிலவரப்படி கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 44,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை மதிப்பாய்வு செய்த சீன நோய் மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, நடுத்தர வயது மற்றும் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வயதானவர்களின் இறப்பு விகிதம் பத்து மடங்கு அதிகமாக இருந்தது தெரிவிந்துள்ளது.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -