ஈரானில் கொரோனாவிலிருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு இந்த வைரஸால் 237 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 7,161 பேருக்கு வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஈரானில் கொரோனா வைரஸின் தாக்குதலின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், சாராயம் குடித்தால் இந்த வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என அங்கு வதந்திகள் பரவி வருகின்றன. இதை நம்பி மக்கள் சாராயத்தை தேடித்தேடி வாங்கி குடிக்க தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு ஈரானின்
குஜெஸ்தான் மாகாணம் மற்றும் அல்பார்ஸ் மாகண பகுதிகளில் விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 220 பேர் பல்வேறு வியாதிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘மெத்தனோல்’ என்ற எரிசாராயம் கலந்த மதுவை குடித்ததால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈரானில் சாராயத்துக்கு அரசாங்கத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் என நம்பி விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -