அதேவேளை ஐ தே க இரண்டாக உடைந்து எதிரிகளாக உள்ளன.
இதே நிலையில் தேர்தல் வருமாயின் வடக்கு கிழக்குக்கு வெளியேயுள்ள அனைத்து மாவட்டங்களையும் பொதுஜன பெரமுன கூட்டு வெற்றி கொள்ளும். நுவரேலியா மாவட்டம் மட்டுமே கொஞ்சம் சந்தேகம். ஆனாலும் அரச கட்சியே வெல்லும் சாத்தியம் அதிகம் உள்ளது.
வடக்கு கிழக்குக்கு வெளியே மொட்டு கூட்டணி போட்டியிடாது என்பதே இன்று வரையான கள நிலவரம். அதுவும் ஒரு அரசியல் தந்திரமாகும்.
வடக்கு கிழக்குக்கு வெளியே மட்டும் என அரச கட்சி போட்டியிடுவதால் தனி சிங்கள வெற்றியாக கருத முடியும். அங்கு வாழும் தமிழரும் முஸ்லிம்களும் மொட்டு கட்சியில் போட்டியிடும் தமிழர், முஸ்லிம்களை வெல்ல வைத்தால் தனி சிங்கள அரசாங்கம் இன்றி தமிழர் முஸ்லிம்களுக்கும் கௌரவமான ஆட்சியாக இருக்கும்.
வடக்கு கிழக்கில் மொட்டு கூட்டணி போட்டியிட்டு அதில் தமிழ், முஸ்லிம் எவரும் வெல்ல முடியாமல் போனால் அது கட்சிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் அவமானமாக போகும். இதனால் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதில்லை என்ற இன்று வரையான பெரமுனவின் முடிவு பாராட்டத்தக்கது என்பதை எதிர்காலம் சொல்லும்.
அதே வேளை வடக்கு கிழக்கில் பெரமுனவின் கூட்டுக்கட்சிகள் தனியாக அல்லது கூட்டாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் அரசுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கலாம் என பெசில் ராஜபக்ஷ சொல்லியுள்ளதாக தெரிகிறது. இது உண்மையாயின் பெசிலின் தாராள மனதையே இது காட்டுகிறது.
வேறு எவரும் என்றால் எம்மோடு இருப்போர் எம்முடனேயே போட்டியிட வேண்டும் என சர்வாதிகாரமாக சொல்லியிருப்பர்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கில் மொட்டு கட்சியின் பங்காளியான சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இத்தகைய சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளை கூட்டிணைத்து தனியே வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது பாரிய வெற்றியை தரும். காரணம் சுதந்திரக்கட்சிக்கான பரம்பரை ஆதரவுத்தளம் வடக்கு கிழக்கில் உள்ளது. கடந்த 2015 தேர்தலில் பிள்ளையான், ஹிஸ்புல்லாஹ் ஐ ம சு. கூட்டணியில் போட்டியிட்டது போன்று இம்முறையும் ஒருவர் வென்று மற்றவர் தோற்றால் அவருக்கு தேசிய பட்டியல் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு ஹிஸ்புள்ளாவும் பிள்ளையான், வியாழன் இணைந்து போட்டியிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான வாக்குகள் கிடைக்கும். இதனுடன் மொட்டுவுடன் இருக்கும் முஸ்லிம் கட்சிகளான தேசிய காங்கிரஸ், ஹசனலி கட்சி, உலமா கட்சிகளும்ய இணைத்தால் இலகுவான வெற்றிக்கான பிரசாரத்தை முன்னெடுக்கலாம்.
அதே போல் அம்பாரை மாவட்டத்திலும் மொட்டுவுடன் இருக்கும் தே. கா, ஐ.ச. கூட்டமைப்பு, உலமா கட்சி போன்றவை இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது நல்லது. இதன் மூலம் சுதந்திரக்கட்சிக்கு ஆதரவான சிங்கள வாக்குகளையும் பெற முடியும்.
கடந்த 2015 தேர்தல் என்பது மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்து முன்னெடுத்த தேர்தலாகும்.
இதில் ஐ தே க தனது மு.கா, ம.கா, மனோ போன்ற கூட்டுக்கட்சிகளுடன் இணைந்து பெற்ற ஆசனங்கள் 106. அதே வேளை மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட அத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நிலையிலும் அக்கட்சி 95 ஆசனங்களை பெற்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. தற்போது மஹிந்த ஆதரவுத்தளம் பாரிய அளவு முன்னேறியுள்ளது என்பதை 2018, 2019 தேர்தல் காட்டுகின்றன.
தமிழ் கூட்டமைப்பு 16 ஜே வி பி 6.
இன்றைய கள நிலவரத்தின் படி வடக்கு கிழக்குக்கு வெளியே மொட்டு கட்சி கூட்டணிக்கு (தேசிய பட்டியலுடன்) 110 உறுப்பினர்கள் கிடைக்கும். காரணம் பெரமுனவின் ஜனாதிபதியின் சிறந்த செயல்பாடுகள், மீண்டும் மஹிந்த பிரதமர் ஆனது, இன்னும் பல காலத்துக்கு பெரமுன ஆட்சியை வீழ்த்த முடியாது என்ற மக்களின் கணிப்பு, மைத்திரியும் மஹிந்தவுடன் மீண்டும் இணைந்தமை 110 ஆசனங்களை மிக இலகுவாக பெறும்.
ரசஜித்தின் கூட்டணிக்கு வடக்கு கிழக்கு உட்பட 65 பேரும் ரணிலுக்கு 26 பேரும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே போல் தமிழ் கூட்டமைப்புக்கு 12ம் ஏனைய தமிழ் கட்சிகளுக்கு 4 அல்லது 6ம் கிடைக்கலாம்.
இந்த நிலையில் ஐ ம சு முன்னணி நாம் சொன்னதற்கிணங்க வடக்கு கிழக்கில் போட்டியிட்டால் 6 உறுப்பினர்கள் பெற முடியும்.
மொத்தம் அரச மொட்டு ஆதரவு 116.
சஜித் கூட்டணி, ரணில், த. கூட்டமைப்பு 107.
ஏனையவை சிறு கட்சிகள் அல்லது சுயேட்சைகளுக்கு கிடைக்கலாம். அல்லது பெருங்கட்சிகளுக்கு பகிரப்படலாம்.
இவ்வாறே முடிவு அமையக்கூடும். சில வேளைகளில் மொட்டுக்கு அதிகரிக்கவும் கூடும்.
தேர்தலின் பின் ரணில் மஹிந்தவுடன் இணைந்து 2/3ம் அமையலாம்.