இலங்கை மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் சாய்ந்தமருதைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாஸ் கலந்துகொண்டு நான்கு பதக்கங்களை பெற்று தனது பிரதேசத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளின் 34வது ஆண்டு சம்பியன்சிப் கடந்த பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 01ம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் விளையாட்டு உத்தியோகஸ்தருமான ஏ.எம்.றிபாஸ் அம்பாறை மாவட்டம் சார்பாக நான்கு மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்டார்.
இவர் கலந்து கொண்ட குண்டு போடுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், பரிதி வட்டம் வீசுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் , ஈட்டி எறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் போட்டிளில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார்.
கம்பஹா மாவட்ட மாஸ்டர் விளையாட்டு சம்மேளனம் விளையாட்டு அமைச்சின் அனுசரணையில் நடாத்திய 6 வது மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டி கம்பஹா ஶ்ரீமாவோ பண்டார நாயக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது இவர் ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசும் நிகழ்சியில் தங்க பதக்கமும், ஈட்டி எறிதல் நிகழ்சியில் வெண்கல பதக்கமும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
