சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் 3,042 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் ( Sylvia Browne ) வெளியிட்ட 'என்ட் ஒப் டேய்ஸ்' ( End Of Days ) புத்தகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தின் 312வது பக்கத்தில், '2020ம் ஆண்டில் கடுமையான நிமோனியா போன்ற நோய் போன்று உருவாகி நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாய்களைத் தாக்கும். உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தும் இந் நோயை உலகின் தலைசிறந்த வைத்திய நிபுணர்களால் கூட இதை கட்டுப்படுத்த முடியாது' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந் நோய் திடீரென்றே மறைந்துவிடும், பின்னர் 10 வருடம் கழித்து மீண்டும் மக்களை தாக்கி பின்னர் முற்றிலும் மறைந்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அவ் புத்தகத்தில் கொரோனா வைரஸ் என்று குறிப்பிட்டு பெயரை சொல்லாவிட்டாலும், 12 வருடத்துக்கு முன்பே இதுகுறித்து கணித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் விரைவில் மறைந்துவிடும் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் அது உண்மையில் நடந்தால் மக்கள் நிச்சயம் நிம்மதி அடைவார்கள். இந்த தகவலை 2008ம் ஆண்டே எழுதிவைத்துள்ள பெண் எழுத்தாளர் சில்வியா பிரவுன் கடந்த 2013ம் ஆண்டே இறந்துவிட்டார்.