தர்மாசார்ய பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் மத விடயதானங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தர்மாசார்யப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களை, இலங்கை ஆசிரியர் சேவையின் 3 - 11 வகுப்புக்கு இணைத்துக் கொள்வதற்காக 2020-02-24 முதல் 2020-03-02 வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட நேர்முகப் பரீட்சை, தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், குறித்த நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
