திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மாவட்டத்திலுள்ள பிரதேசம்தோறும் சென்று இவ்வகுப்புகளை அங்குரார்ப்பணம் செய்துவருகிறார்.உதவியாக மற்றுமொரு உத்தியோகத்தர் கே.பிரதாப் ஈடுபட்டுவருகிறார்.பிரதேசங்கய் தோறும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புர்டன் செயற்பட்டுவருகிறார்கள்.
இந்'துகலாசாரத்திணைக்களத்தின் திணைக்களப்பணிப்பாளர் அருள்.உமாமகேஸ்வரன் இத்திணைக்களத்தை பாரமெடுத்தபிற்பாடு இந்துசமய அறநெறிக்கல்வியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுவருவதைக்காணலாம்.
அறநெறிமாணவர்களுக்கு பாடநூல்த்தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அறநெறி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது.
இதைவிட அறநெறி மாணவரிடையே ஆன்மீக் நெறியை மேலும் ஊக்குவிக்கும்பொருட்டு பலவித நிகழ்ச்சிகளை நடாத்திவருகிறது. அதற்கான பரிசளிப்புவிழாவை பாரியளவில் நடாத்திவருகிறது. சிறந்த அறநெறிவகுப்புகளைத்தெரிவுசெய்யும் போட்டி ஆக்கதிறன்விருதுவழங்கும் போட்டி அதற்கான பரிசளிப்புவிழாக்கள் என்று பலதரப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை மின்னாமல் முழங்காமல செவய்துவருகிறார் பணிப்பாளர் அருள்.உமாமகேஸ்வரன் அவர்கள்.
இதனைவிட வடக்கில் ஆறுமுகநாவலர் பெருவிழாவையும் கிழக்கில் சுவாமி விபுலாநந்தர் பெருவிழாவையும் நடாத்திவருகிறார்.
அறநெறி மாணவர்களுக்கு தெய்வப்படங்கள் மற்றும் திருவுருங்கள் எவ்வாறு வரைவது என்பது தொடர்பில் இந்தியாவிலிருந்து பிரபல ஆஸ்தான ஓவியர் க.பத்மவாசன் என்பவரை அழைத்து பயிற்சி வழங்'கப்பட்டது. அதன்தொடர் எதிர்வரும் சிவராத்திரியின்று தொடரவிருக்கிறது.
இவ்வகுப்புகளை எதிர்வரும் 21ஆம் திகதி பார்வையிடவிருக்கும் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஓவியம்வரைதல் பயிற்சியை வழங்கிவிருக்கிறார்.
அறநெறி மாணவர்கள் நீண்டகாலத்திற்குப்பிறகு இவ்வகையான யோகா பண்ணிசை நடனம்மாலைகட்டுதல் போன்ற வகுப்புகளில் ஆர்வமாக ஈடுபட்டுவருவதைக்காணலாம்.
வரலாற்றில் முதன்முறையாக இந்துகலாசார அமைச்சு தமிழ்கலைஇலக்கியவாதிகளை கௌரவித்த பெருவிழா அண்மையில் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலைக்காதக அரிய சேவையாற்றிய பல மூத்த நடுத்தர இளஞ்கலைஞர்கள் பாராட்டிக்கௌரவிக்ப்பட்டார்கள்.
மாவட்டத்திற்கான இந்துகலாசார கற்கைகள் நிலையம் சுவாமி விபுலாநந்தர் பெயரில் காரைதீவு சுவாமி விபுலாநந்த மணிமண்டப வளாகத்தில் அமையப்பெற்றிருப்பதும் அங்கு பலவகையான இந்துசமய பயிற்சிநெறிகள் கலசார நிகழ்வுகள் நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அங்கு ஓவியம் வரைதற்பயிற்சி நடைபெறவிருக்கிறது.
இந்துசமய அறநெறி மாணவர்கள் மத்தியில் தற்போதுதான் புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுவருகிறது.. ஆசிரியர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்துவருகிறது. இது மேலும் தொடரவேண்டும் என்பதே எமது அவா.
கலைச்சுடர் வி.ரி.சகாதேவராஜா
இந்துகலாசார அமைச்சின் கலைச்சுடர் விருதுபெற்ற கலைஞர்.
