பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றால், அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு, துரித தொலைபேசி இலக்கம், 18 ஆம் திகதி முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், 0777128128
என்ற தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு இது தொடர்பிலான தகவல்களை வழங்க முடியும்.
பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்காக பாடசாலை சமூகத்தை நேரடியாக ஊக்குவிக்கவும், தவறான புரிந்துணர்வின் காரணமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, அனைத்து பாடசாலைகளையும் போதைவஸ்து பாவனைகளிலிருந்து விடுப்பட்ட பாதுகாப்பான சூழலாக மாற்றுவதனை நோக்காகக் கொண்டு கல்வி அமைச்சும், பொலிஸ் திணைக்களமும், அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டு தேசிய சபையும் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் அதிகளவு போதைப்பொருள் விநியோக மற்றும் பாவனை நடவடிக்கைகள், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன.
