தேசிய கீதம் தமிழில் பாட முடியாது என கூறவில்லை-கருணா

பாறுக் ஷிஹான்-

லங்கையின் தேசிய கீதம் தமிழில் பாட முடியாது என தான் கூறியதாக தவறான தகவல் என்று பேசப்பட்டு வருகிறதை ஏற்கமுடியாது என

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை உப பிரதேச் செயலக முன்றலில் புதன்கிழமை(5) இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் தேசிய கீத விவகாரம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு தனது தன்னிலை விளக்கத்தை மேற்கண்டவாறு கூறினார்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாட முடியாது என தான் கூறியதாக சிலர் தவறாக மக்களை வழிநடாத்துவதை மறுக்கின்றேன்.அதில் ஒரு தவறான விடயம் இடம்பெற்றதாக பகிரப்பட்டு வருகின்றது அதாவது ஏற்கனவே வர்த்தமானியில் தமிழில் தேசிய கீதம் பாட முடியும் என தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது.

இதில் எமது என்று பிரதம மந்திரியும் தமிழில் தேசிய கீதம் பாட முடியும் என ஏற்கனவே கூறிவிட்டார் . ஆனால் இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்பதை நான் மறுத்ததாக தவறான தகவல் என்று பேசப்பட்டு வருகிறது .இதனை நான் உண்மையில் மறுக்கிறேன்.

இலங்கையில் இன்று நாங்கள் மதிக்கப்படுகின்ற மக்களாக இருக்கின்றோம் ஏனென்றால் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது. இந்தியாவில் 24 மாநிலங்கள் இருந்தபோதிலும் அங்கு ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படுகிறது. இதே முறைதான் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது. அந்த நிலையில்தான் எமது ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடலாம் என்று கூறியிருக்கிறார்கள்.இந்த விடயம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. தமிழ் மொழியில் பாடலாம் என்பது இதனை ஏன் இங்கு விவாதிக்கிறார்கள் என்று கேட்டதே ஒழிய தமிழ் மொழியில் பாட கூடாது என நான் கூறவில்லை. பாராளுமன்றத்தில் இருக்கும் போதே நான் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டும் என கூறி இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி கொண்டு வந்தவன். இந்த விடயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.

எனவே இதனை தற்போது தவறான முறையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும் இதனை தவறாக கூறியிருக்கின்றார். தமிழில் தேசிய கீதம் பாடுவதை நான் தடுத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய கட்சி தனித்தமிழ் கட்சி. எமது கட்சியின் பெயர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எமது கட்சியை தொடங்கி அதில் பாரிய வளர்ச்சியை கண்டு வருகின்றோம் .

அவ்வாறான நாங்கள் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எவ்வாறு நாங்கள் மறுப்போம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் .எங்களது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அவர்களது கடந்தகால தவறுகளை நியாயப்படுத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாகரீகமற்ற அரசியலை தற்போது செய்து வருகின்றனர். 

அதனை முதலாவதாக முன்னின்று செய்து வருபவர் கோடீஸ்வரன் எம்பி அம்பாறை மாவட்டத்திலே அவர் நிச்சயமாக தோற்கப்போகின்றார். மக்கள் அவருக்கான பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -