எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது வொலிவேரியன் மைதான அபிவிருத்தி கண்காட்சி போட்டியில் நீல நேவி அணியினர் 4 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றனர்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) வெள்ளிக் கிழமை நடைபெற்ற சினேக பூர்வ கிரிக்கெட் கண்காட்சி போட்டியில் நீல நேவி அணியினரை எதிர்த்து பச்சை ஆமி அணியினர் மோதிக் கொண்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நீல நேவி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 17 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியிலே 134 ஓட்டங்களை நீல நேவி அணியினர் பெற்றுக் கொண்டனர்.
135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிரீன் ஆமி அணியினர் 16.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் நீல நேவி அணியினர் 4 ஓட்டங்களால் வெற்றியீட்டினர்.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக நீல நேவி அணியைச் சேர்ந்த எம்.ஜி.எம். தாஜுதீன் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டார். போட்டியின் வெற்றி பெற்ற நீல நேவி அணியினருக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களால் கிண்ணம் மற்றும் பணப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் 03 ம் கட்ட அபிவிருத்திப்பணியான சுற்று வேலி அமைப்பதற்கான திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் ஏற்கனவே இரண்டு கட்டமாக மைதானத்தை செப்பனிடும் பணிக்காக சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் செப்பனிடப் பட்டு தற்போதும் சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு பிரதம அதிதி சிராஸ் மீராசாஹிப் உரையாற்றும் போது,
சாய்ந்தமருது மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டதற்கிணங்க நான் இரண்டு கட்டங்கள் இந்த மைதானத்தை செப்பனிட்டு கொடுத்துள்ளேன். அதுபோன்று மூன்றாவது கட்டமாக எவ்வளவுதான் அபிவிருத்தி செய்தாலும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் இதர பிரச்சினைகளால் இந்த மைதானம் மீண்டும் மீண்டும் செப்பனிடப்பட வேண்டிய தேவை ஏற்படும். இதனால் இங்கு வளைத்து வர சுற்று மதிலும் அவசியமாகும். எனவே, சுற்று மதிலை அமைப்பதற்கான மூன்றாம் கட்ட வேலையையும் இன்று நான் ஆரம்பித்து இருக்கின்றேன்.
எமது நாட்டின் நாளைய தலைவர்களான இந்த இளைஞர்களை பாதுகாக்க வேண்டியது நமது கட்டாய பொறுப்பாகும். எனவே தான் அவர்களின் தேவையான விளையாட்டு என்கின்ற அந்த உடல் ஆரோக்கியத்தை பேணி சமூக சீர்கேடுகளில் இருந்து பாது காக்கப்பட வேண்டும்.
அவர்கள் இளமை காலத்தை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பான முறையிலே அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு அரசியல் துறை சார்ந்தவர்கள் மற்றும் ஊர் புத்திஜீவிகள் அனைவருக்கும் இருக்கின்றது.
எனவே தான் நாங்கள் இந்த பணியை தொடர்ந்து செய்து அவர்களுக்கு ஒரு கட்டுக்கோப்பான ஒரு மைதானத்தை இந்த பிரதேசத்தில் அமைத்துக் கொடுத்து அழகு பார்க்க இருக்கின்றோம்.
நான் எதிர்காலத்திலும் இந்த மைதான அபிவிருத்திக்கு அரசியலுக்கு அப்பால் எனது தனிப்பட்ட ரீதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை நான் இங்கே செய்து கொடுப்பதற்கு திடசங்கற்பம் பூண்டு இருக்கின்றேன்.
இந்த விளையாட்டு கழகத்தினர் எத்தனையோ அரசியல்வாதிகள் இங்கு இருந்தாலும் அவர்கள்
அனைவரிடமும் சென்று கதைத்து இந்த விடயத்தில் தோல்வி கண்டதன் பின்னர் தான் என்னிடம் வந்தார்கள். அதனால் இவர்களை இவ்வாறு நாங்கள் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த அபிவிருத்தி வேலையை நான் செய்வதற்கு துணிந்தேன்.

அதுபோன்று இது அரசியலுக்கு அப்பாற்பட்ட எனது முயற்சி என்றாலும் உண்மையிலேயே நாங்கள் அதிகாரத்தில் இருந்தால் இதை விட பன்மடங்கு எங்களது வேலைகளை இந்த தாய் மண்ணுக்காக செய்வோம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் மைதான அபிவிருத்தி போன்ற விடயங்களில் அனைவரும் கைகோர்த்து நாம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அது போன்று இந்த போட்டியை நான் பார்க்கின்ற போது மிகச் சிறப்பாக விளையாடுகிறார்கள். சிறப்பான முறையிலே பல்வேறுபட்ட திறமைசாலிகள் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் இருக்கின்றார்கள்.

இந்த பிரதேசத்தில் இருக்கின்ற விளையாட்டுத்துறையான கிரிக்கெட், உதைபந்து மேலும் இதர போட்டிகளிலும் எமது வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டத்திற்கு தெரிவு செய்யப்படுகின்ற ஒரு நிலையை நாம் இங்கிருந்து உருவாக்க வேண்டும். அதற்கான வசதி வாய்ப்புகளை நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும். ஆகவே தான் அரசியல்வாதிகள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன் கட்சி பேதங்களை மறந்து ஊர் பேதங்களை மறந்து அபிவிருத்தி என்ற அடிப்படையிலேயே இளைஞர்களுக்கு மட்டுமல்லாது இந்த ஊருக்கும் சேவை செய்ய நாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.