நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு..

ஐ. ஏ. காதிர் கான்-

நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள் உள்ளதாகவும், குறித்த வைத்தியர்களுக்கு எதிராக முறைப்பாடு மற்றும் தகவல் சேகரிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தை, எதிர்வரும் வாரமளவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒருசில வருடங்களுக்கு முன்னர் வெளியான தகவல்களுக்கு அமைய, நாடு முழுவதும் போலி வைத்தியர்கள் சுமார் 40,000 பேர் உள்ளதாகவும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -