பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தாதிய பரிபாலகராக பல வருடகாலமாக பணியாற்றி , இடமாற்றலாகிச் செல்லும் எஸ்.ஜலால்தீனின் சேவையை பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு அண்மையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வைத்தியசாலை நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் . ஐ.எல்.எம்.றிபாஸ் டொக்டர். ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் , வைத்தியசாலை விடுதிப் பொறுப்பாளர் பீ.ரகுநாதமூர்த்தி , தாதி உத்தயோஸ்தர்கள் , வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் , என பலரும் கலந்து கொண்டனர்.
