போக்குவரத்து பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -ஹட்டன் நகரில் மணிகூட்டு கோபுரத்தின் அருகாமையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை என காட்சிப்படுத்தப்பட்டுள்ள,குறீட்டு கம்பத்திற்கு முன்னாள் வாகனங்களை நிறுத்து பொருட்களை ஏற்றுவதாகவும் இவ்விடத்தில் கடைமையில் இருக்கும் பொலிஸார் இதனை கண்டு கொள்ளாது பாராமுகமாக இருந்து விடுவமதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த இடத்தில் சனநடமாற்றம் அதிகமாக இருக்கும் போது பாதைசாரிகள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் வெற்று கேஸ் சிலின்டர்களை அடுக்கி வைத்து லொறிக்கு ஏற்றுவதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் எந்நேரமும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருக்கின்ற போதிலும் இவர்கள் இது குறித்து எவ்வித கவனமும் செலுத்துதில்லை. என்றும் மாறாக அவர்களும் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகனங்களை நிறுத்தி பேசிக்கொண்டிருப்பதாகவும்,வாகனங்களை நிறுத்தி செல்வதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இவர்களுக்கு நெருக்கமில்லாதவர் வாகனங்களை நிறுத்தும் பட்சத்தில் மாத்திரம் இவர்கள் உடனடியாக செயப்பட்ட இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
என இது குறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

