கிறிக்கட் போட்டியும் சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை சுற்றி வேலி அமைத்தலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும்

அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி கிறிக்கட் போட்டியும் சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை சுற்றி வேலி அமைத்தலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று ( 28 ) இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் , பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் , ஸஹிரியன் விளையாட்டுக் கழகம் ,ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் , இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் , மியன்டாட் விளையாட்டுக் கழகம் , சன் பிளவர் விளையாட்டுக் கழகம் , ஒஸ்மானியா விளையாட்டுக் கழகம் , நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் , ஏஜ் ஸ்ட்ரீல் விளையாட்டுக்கழகம் , பிளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் , பைன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் , பீமா விளையாட்டுக் கழகம் , றியல் பவர் விளையாட்டுக் கழகம் , மருதூர் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை உள்ளடக்கியதாக புழு நேவி ( BLUE NAVY ) என்ற ஒரு கிறிக்கட் குழுவிற்கும் கிறீன் ஆமி ( GREEN ARMY ) என்ற ஒரு கிறிக்கட் குழுவிற்கும் இடையில் 17 ஓவர்கள் கொண்ட இந்த கண்காட்சி கடினபந்து கிறிக்கட் போட்டி இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரீ.கே.எம்.ஜலீல் தலைமையிலான புழு நேவி ( BLUE NAVY ) கிறிக்கட் அணியினர் 17 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்.எச்.ஏ.காலித்தீன் தலைமையிலான கிறீன் ஆமி ( GREEN ARMY ) கிறிக்கட் அணியினர் 16 2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 4 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 18 பந்து வீச்சுகளுக்கு 33 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றி புழு நேவி ( GREEN ARMY ) கிறிக்கட் அணி வீரர் முஹம்மட் தாஜுன் தெரிவு செய்யப்பட்டார்.பழு நேவி ( GREEN ARMY ) கிறிக்கட் அணியின் சார்பில் முஹம்மட் பயாஸ் 34 ஓட்டங்களையும் , முஹம்மட் தாஜுன் 33 ஓட்டங்களையும் கிறீன் ஆமி ( GREEN ARMY ) கிறிக்கட் அணி சார்பில் இர்ஸாத் 36 ஓட்டங்களையும் , சஜாத் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிகழ்வின் போது முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதயாக கலந்து கொண்டதுடன் சுமார் 5 இலட்சம் ரூபா சொந்த நிதியில் மைதானத்தை சுற்றி இட இருக்கும் வேலிக்கான பொருட்களையும் விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதி நிதிகளிடம் கையளித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -