ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் புதிதாக ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் முதலைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் அவர்களின் மக்கள் காங்கிரஸ், ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய ஐந்து கட்சிகளே ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் புதிதாக இணைந்துள்ளன.
