சாய்ந்தமருதை சேர்ந்த பொலிஸ் பாிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் பிரதம பொலீஸ் பாிசோதகராக பதவி உயர்வு.


எம்.என்.எம்.அப்ராஸ்-
சாய்ந்தமருதூரை பிறப்பிடமாகக் கொண்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ,சூற்று சூழல் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாாியாக
கடமையாற்றுகின்ற பொலிஸ் பாிசோதகர் எஸ்.எல். சம்சுதீன்
பிரதம பொலிஸ் பாிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

களுத்துறை , கட்டானை பொலிஸ் கல்லூரியில் ஆரம்ப பயற்சியை பெற்ற பின் 1988 இல் பொலிஸ் உப பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த இவர் தந்திரிமலை, கெபிடிக்கொலாவ,
பேலியக்கொட, அக்கரைப்பற்று,மட்டக்களப்பு,அம்பாரை,
ஆகிய பொலிஸ் நிலையங்களில் பணி புரிந்துள்ளதுடன்,கல்முனை ,
சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் பதில் நிலைய பொறுப்பாதிகாரியாகவும் கடமை புரிந்துள்ளார்.

அத்தோடு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மரண விசாரணை டிப்ளோமா (Distance Learning Diploma in Death Investigation 2015) பட்டத்தினையும்,இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழிப் பயிற்சி டிப்ளோமா கற்கை நெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருத்து அல்-ஹிலால் வித்தியாலயம் ,மற்றும் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாடசாலை நாட்களின் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற
மெய்வல்லுனர்,உதைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்ட ரீதியாக திறமையை வெளிக்காட்டிய இவர் சமூக சேவைகளில் முன்னின்று உழைத்தவராவார்.
பொலிஸ் சேவையில் அதி சிறந்த சேவையாற்றியதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியினால்
இவருக்கு "தேசத்தின் புத்திரன்" கெளரவ பதக்கத்தினை
2015.10.08இல் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -