பொதுமக்களின் வேலைகளை இலகுவாக்க இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கும் வேலைத் திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

னாதிபதியின் எண்ணக்கருவில் அரச அலுவலகங்களின் மக்கள் சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சேவை பெறுவதற்காக வரும் மக்களின் சேவைகளை இலகுபடுத்தும் வகையில் சேவைகளை பதிவு செய்து இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கும் வேலைத் திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் வழிகாட்டலில் செயலகத்தில் சேவை பெறுவதற்காக வரும் மக்களின் சேவைகளை பதிவு செய்து இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கி வைக்கப்படுகின்றது. மக்களின் சேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனில் குறித்த துண்டினை மீள அலுவலகத்தில் வழங்கும் பட்சத்தில் சேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடியும்.

செயலகத்தில் உள்ள சேவை வழங்கும் பிரிவில் சேவைகள் திறம்பட மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கு குறித்த இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச அலுவலகத்தில் திறம்பட வேலைகள் இடம்பெறுகின்றது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -