லிந்துலை மெராயா தோட்டத்தில் 100 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு..





தலவாக்கலை பி.கேதீஸ்-

லையகத்திலே பெருந்தோட்ட தொழிலாளர்கள் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அவர்களின் பிள்ளைகள் எந்தெந்த துறைகளிலே இருக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் மலையக மக்களே.

 எனவே இவர்கள் அனைவருக்கும் இன,மத,கட்சி பேதமின்றி தனி வீடுகளை அமைத்து கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

லிந்துலை மெராயா தோட்டத்தில் 100 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களினாலேயே இன்று நாம் சகல உரிமைகளையும் பெற்று மரியாதையுடனும் வீரத்துடனும் வாழ்;கின்றோம்.

 அவர் எமக்கு கல்வி உரிமை,தொழில் உரிமை,வாக்கு உரிமை என்று பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர். எதையும் தட்டிக்கேட்டு கேள்வி கேட்கும் தைரியத்தை எமக்கு ஊட்டியவர் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே. 

அவர்களின் வழியில் வந்த இன்றைய தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் மலையக மக்கள் மீது அதிகமான அக்கரை கொண்டு செயற்படும் ஒரே தலைவர்.மலையக மக்களை நாம் என்றுமே இன,மத,மொழி, கட்சி என்று பிரித்து பார்;ப்பதில்லை. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தேசிய வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது மெராயா தோட்டத்திற்கு 2002ம் ஆண்டளவில் வீடுகளை அமைப்பதற்கு காணியை பெற்றுக்கொடுத்தார்.

 அதன்பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இந்த அமைச்சு எம்மிடம் இருக்கவில்லை. ஆனால் இன்று 18 வருடங்களுக்கு பிறகு அதே காணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் 100 வீடுகளை அமைக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

அன்று முதல் இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்துள்ளது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்கைகளை எமது பெற்றோர்கள் பின்பற்றியமையினால் இன்று நாம் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ்கின்றோம்.

 அதேபோல இன்றைய தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயாவின் கொள்கையை பின்பற்றி அவரின் கரங்களை இன்றைய இளைஞர்கள் பலப்படுத்துங்கள் நமது எல்லோருடைய வாழ்க்கையும் சுபீட்சமாக அமையும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -