ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் காணாமல் போயுள்ளார்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.-

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து இன்று (19.02.2020) புதன்கிழமை மதியம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து ஒருவர் விழுந்து காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் வாழைச்சேனை துறைமுக கடற்படையினர் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை (19.02.2020) மதியம் வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்படிப்பதற்காக சென்ற படகு வாழைச்சேனையில் இருந்து பணிரெண்டு கிலோ மீற்றர் தூரத்தில் படகில் இருந்த ஒருவர் தவருதலாக கடலில் விழுந்ததாகவும் அவரை தேடும் பணியில் குறித்த நபர் சென்ற படகும் மற்றும் துறைமுகத்தில் இருந்து சென்ற படகுமாக இரண்டு படகுகள் கடற்படையினரின் உதவியுடன் தேடிவருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இன்று மதியம் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பௌசுல் முஹம்மட் இக்ரம் (வயது – 31) என்பவரும் அவரது தந்தையும் மற்றுமொருவருமாக மூன்று பேர் சென்ற நிலையிலயே பௌசுல் முஹம்மட் இக்ரம் என்பவரே கடலில் தவருதலாக விழுந்து காணாமல் போயுள்ளவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -