உணவே மருந்து ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ணவே மருந்து எனும் தொனிப்பொருளில் ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை (22) மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் வளவாளராக இந்தியாவைச் சேர்ந்த என்.ராஜசேகர் கலந்து கொண்டு அனைத்து விதமான நோயிகளுக்குமான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதோடு நோய்கள் வராமல் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

அத்தோடு நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கியதோடு, முறையற்ற உணவு முறைகளால் அதிகம் நோய்த் தாக்கங்களுக்கு மனிதர்கள் அன்றாடம் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -