தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னை துரோகி என்று சொன்னாரா?

கோடீஸ்வரன் தனது விஞ்ஞாபனத்திலுள்ளதில் ஒன்றையாவது செய்தாரா?
காரைதீவில் கருணாஅம்மான் பகிரங்கமாக கேள்வியெழுப்பினார்.


காரைதீவு நிருபர் சகா-
நான்துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ளஅனைவரும் துரோகிகளே. ஏனெனில் அன்று மாவையைத்தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. தலைவர்பிரபாகரன் எப்போதாவது என்னைத்துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாகசவால் விடுகிறேன்.
இவ்வாறு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர்ஜக்கியசுதந்திரமுன்னணியின் தலைவருமான கருணா அம்மான்எனஅழைக்கப்படும்வினாயகமூர்த்தி முரளிதரன் நேற்று காரைதீவில் கூறினார்.
காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கட்சியின்காரைதீவு இணைப்பாளர் தியாகராஜா ஞானேந்திரன் தலைமையில் பொதுப்பிரமுகர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றபோது பிரதான உரையாற்றுகையில்அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்அங்கு மேலும்உரையாற்றுகையில்: நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப்பிரதிநிதித்துவம்இல்லாமல்போகுமாம். சரி இந்த கோடீஸ்வரன்இதுவரைஇருந்து சாதித்தது என்ன? அவர்தேர்தலில்வெளியிட்டவிஞ்ஞாபனம் உள்ளதே.அதில் ஒன்றையாவது செய்திருந்தால் அவரை மன்னிக்கலாம். ஒன்றையாவது செய்தாரா? இல்லையே. அம்பாறை மாவட்டத்தில் 1லட்சத்து 25ஆயிரம் தமிழ்வாக்குகளுண்டு.சரி 60வீதமானோர் வாக்களித்தால் 70ஆயிரம்வாக்குகள் விழும். அப்படிப்பார்த்தால் 2ஆசனங்களையே பெறக்கூடியவாய்ப்பு உருவாகும்.
இந்த நிலையில் தமிழ்பிரதிநிதித்துவம் எவ்வாறு இல்லாமல்போகும்?
19வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டு.அம்பாறை தளபதியாகியது நான்மட்டுமே. வடமராட்சி ஒப்பரேசன் தொடக்கம் தலைவருக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் எமது மட்டு.அணிதான் அங்கு சென்று சரித்திரம்படைத்ததை அனைவரும்அறிவார்கள். எனவே அம்பாறை மாவட்டதமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய தேவை எனக்குள்ளது.
கல்முனைத் தமிழ் பிரதேச செயலக விவகாரம் கடந்த 30வருடகாலமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கையில் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் திடீரென நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குறித்தஅமைச்சரிடம்கேட்டபோது தனக்குத்தெரியாது என்றார். சாய்ந்தமருது நகரசபையாகலாம் மாநகரசபையாகலாம்.அது பிரச்சினையல்ல. ஆனால் எமது பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படவேண்டும்.இதில்மாற்றுக்கருத்துக்கிடமில்லை. எல்லைநிர்ணயம் என்றுகூறிஇழுத்தடிக்கமுடியாது.
தமிழர்பூர்வீகமாகவாழ்ந்த கல்முனையைஎமது இடமென்றுகூறிக்கொண்டு செயலகம் தரமுயர்த்தமுடியாது என்று சொல்லயாருக்கும் உரிமையில்லை.
எனவேதான் உரிமைஅபிவிருத்திக்காகஅதிகாரத்தோடுகுரல்எழுப்ப பாராளுமன்றம் செல்லவேண்டும்.
முன்புஇருதடவைகள் தேசியபட்டியலில் பாராளுமன்றம் சென்றேன்.ஆனால்இம்முறைஅம்பாறைத்தமிழ்மக்களுக்காக தேர்தலில்நின்று பாராளுமன்றம் செல்வேன்.அதற்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என்றார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -