வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே.எம். முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் அஹமட் அலி இப்ராஹிம் அல் முஅல்லா (Ahmed Ali Ibrahim Al Mualla) அவர்களினால் குருநாகல் மாவட்டத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு, சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதிவாய்ந்த 10 நவீன படுக்கைகள் இன்று நன்கொடை செய்யப்பட்டது.
குருநாகல் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநாகல் மருத்துவமனையின் பிக்குகளுக்கான வாட்டுக்கு 02 படுக்கைகளும், மதவ மருத்துவமனைக்கு 02 படுக்கைகளும், நிகவெரட்டிய மருத்துவமனைக்கு 03 படுக்கைகளும், கோபேகணை மருத்துவமனைக்கு 03 படுக்கைகளுமாக மொத்தம் 10 நவீன படுக்கைகள் நன்கொடை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண பௌத்த தேரர்களுக்கான நீதித்துறையின் தலைமைப் பிக்கு ரேகவ ஜினரத்ன தேரர், பூவக்மொடே தம்மதஸ்ஸி தேரர், குருநாகல் நகர மேயர், நகரசபை உறுப்பினர்கள், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -