சட்டவிரோதமாக மணல் ஏற்றியோர் வாகனங்களுடன் கைது..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளின் சுற்றிவளைப்பயடுத்து கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த கனரக வாகனம், உழவு இயந்திரம் மற்றும் சந்தேக நபர்கள் மூவர் புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் மாதுறுஓயா ஆற்றில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரத்னபுர பகுதியை சேர்ந்த கனரக வாகனம் மற்றும் சந்தேக நபர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளாமைச்சேனை கோறளை வன காட்டுப் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் சந்தேக நபர்கள் இருவர் வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றிவலைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதுறுஓயா ஆற்றில் தொடர்;ச்சியாக சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் மண் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -