விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு.


எப்.முபாரக்-

மாற்றுத்திறனாளி பிள்ளைகளை பாடசாலையில் இணைத்து அவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் கந்தளாய் ஐக்கிய மாற்றுத்திறனாளி சங்கமும் நவஜீவன நிறுவனமும் இணைந்து (26) விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இதன் போது மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகளால் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் சட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் பொது மக்களுக்கு ஒலி பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

நவஜீவன நிறுவனமும் கந்தளாய் ஐக்கிய மாற்றுத்திறனாளி சங்கமும் இணைந்து செயற்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் பாடசாலை செல்லாமல் உள்ள மாணவர்களை பாடசாலையில் இணைத்து அவர்களின் கல்வி உரிமைகயை உறுதி செய்வதுடன் விசேட கல்விப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களை முன்னேற்றி அவர்களை சாதாரண மாணவர்களுடன் கல்வி கற்கச் செய்யும் நடைவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -