ஆறுமுகன் தொண்டமானின் 4.70 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 4 கோடியே 70 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இன்று (19) திகதி நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.குழந்தவேலு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் போது டிக்கோயா மணிக்கவத்தை இலக்கம் 01 தோட்ட பகுதியில் நிர்மானிக்கப்பட்ட ஹட்டன் தரவலை பகுதியினை இணைக்கும் வீதியின் பாலம் திறந்து வைக்கப்பட்டதுடன்.இப்பகுதியில் குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதியினை கொங்கீறீட் புனரமைப்பு செய்வதற்கு வேலையையும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து வனராஜா கீழ் பிரிவு, வனராஜா மேல் பிரிவு, ஆகியவற்றிக்கு செல்லும் வீதியினையும், தரவலை என்.எஸ்.பி.வீடமைப்பு திட்டத்திற்கு செல்லும் வீதியினையும் புனரமைப்பு பணிகளும் இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த வீதிகளையும்,பாலத்தினையும் புனரமைப்பதன் மூலம் இந்த பிரதேசங்களில் வாழும் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட, குடும்பங்களையும் சேர்ந்த பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் நன்மையடைய உள்ளனர்.

இது குறித்து நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.குழந்தவேலு கருத்து தெரிவிக்;கையில் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வராது என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியாக இருந்து, முடிவு எடுத்ததன் காரணமாக திரு கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியானவுடன் மூன்றாவதாக ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அமைச்சு பதவியினை வழங்கினார். இன்று அதன் பயனாக் கடந்த வாரம் இந்திய சென்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 10000 வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.கடந்த வாரம் வீடமைப்பு திட்டத்தினையும் வெலிஓயா பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.கடந்த 2013,2014 காலப்பகுதியில் நாங்கள் வாங்கிய இந்திய வீடமைப்பு திட்டத்தினையும் மற்ற அமைச்சர் கட்டிகொடுத்தார்கள.; அதிலும் பாதி வீடுகள் கட்டப்படவில்லை. கட்டிய வீடுகளுக்கும் தண்ணீர் மின்சாரம்,போக்குவரத்து வசதிகள் எதனையும் செய்து கொடுக்கவில்லை. அவர்கள் மக்களை ஏமாற்றி தான் சென்றார்கள். இந்த ஏமாற்றங்கள் கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கும் வரைக்கும்

நடக்காது. அவர் எப்போதும் மக்களுக்கு நிறை வேலைகளை செய்ய வேண்டும் என்று, நினைக்கிறார். தற்போது சம்பளம் விடயம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்,மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும.; என்று நினைகிறார்.மக்களுக்கு என்னென்ன பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை எல்லாம் செய்வதற்கு அவர் முயற்சி செய்து வருகிறார்.எனக்கு எந்த வீடையும் திறந்து வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. தண்ணீர் வசதி,வீதி வசதி,மின்சாரம் ஆகிய அனைத்தையும் நான் செய்து தருகிறேன் நீங்களே வீட்டை திறந்து வையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரம் வெஞசர்,டின்சின் ஆகிய பகுதிகளில் அவரால் தான் காபட் பாதை போடப்பட்டுள்ளது.ஆனால் இதை அவர்கள் தான் செய்தாகதாக சொல்கிறார்கள.; கோவைகளை பாரத்தால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தான் செய்துள்ளார்.

ஆகவே இந்த பாதைகளை திறப்பதற்கான வேலைகளை எதிர்வரும் வாரத்தில் செய்யவுள்ளேன்.ஆகவே நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் அவர் உறுதியானவர். நாடு போற போக்கில் போவவர் அல்ல.மலையகம் எப்படி வரவேண்டும் என்று தான் அவர் நினைக்கிறார்.எனவே நீங்கள் அனைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸூடன் இருங்கள் அப்போது உங்களுக்கு தேவை அனைத்து வேலைகளும் நடக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் அருள்நாயகி உட்பட இ.தொ.கா. முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -