ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிக்கமைய மார்ச் முதல் 1,000 சம்பளம்- அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் March மாதம் 1ம் திகதிமுதல் 1,000 ரூபா சம்பளம் உயர்வு கட்டாயம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
இறம்பொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கருத்து வெளியிடுகையில்:-

ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 32 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவற்றை தற்போது நிறைவேற்றி வருகிறோம்.
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சி இடம்பெறுகிறது. அதற்கான இடத்தை பார்வையிடுவதற்காக அடுத்தவாரம் உயர் கல்வியமைச்சர் மலையகத்துக்கு வரவுள்ளார்.
வீடமைப்புத் திட்டமும் துரிதப்படுத்தப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல மலையகத்தில் வாழும் வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் March மாதம் 1ம் திகதிமுதல் 1,000 ரூபா சம்பளம் உயர்வு நிசசயமாக வழங்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -