இருக்கின்ற உரிமையை அரசாங்கமே முன்வந்து மறுக்கின்றது என்பது மிகவும் துரதிஸ்ட்டவசமானது

பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் 
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நான் தேசிய கொடியினை ஏற்றும் போது கூட நாளை மறுதினம் நடைபெறவுள்ள சுதந்திர தினத்தினை நினைத்து தான் இந்த கொடியினை ஏற்றி வைத்தேன். இந்த நாடு எங்கள் நாடு. என்று எண்ணிதான் கொடியினை ஏற்றி வைத்தேன.; இந்த சிறிய விழாவில் கூட தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு தொடங்க வேண்டும். என்று எண்ணி இந்த மக்கள் அதனை செய்கிறார்கள். ஆனால் கடந்த அரசாங்த்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு பெற்றுக்கொடுத்த உரிமையை அரசாங்கமே முன் வந்து மறுக்கின்றது என்பது மிகவும் துரதிஸ்ட்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் தெரிவித்தார்.
ஹட்டன் குடாஓயா பகுதியில் கடந்த பல வருடகாலமாக வாகனங்கள் செல்லும் அளவுக்கு வீதியின்றி அவதிப்பட்ட மக்களுக்கு சுமார் 20 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று (02) மாலை கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...
தேசிய கீதம் தமிழில் பாடக்கூடாது என்று அரசாங்கமே முன்வந்து சொல்லும் போது, எவ்வாறு தமிழ் பேசும் மக்களிடையே நாட்டுப்பற்றுதலை உருவாக்குவது.அர்ப்பணிப்பை எவ்வாறு உருவாக்குவது. எனவே பெற்றுக்கொடுக்கின்ற உரிமைகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.அவ்வாறு பெற்றுக்கொடுக்கும் போது அதனை மறுக்கின்றவர்கள் யார?; என அடையாளம் காண வேண்டும். தேர்தல் காலங்களில் மாத்திரம் வருபவர்கள் யார்? என அடையாளம் காண வேண்டும்.தேர்தல் இல்லாத காலத்திலும் யார் வருகிறார்கள். என்று, அடையாளம் காண வேண்டும்.யார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள். என்று அடையாளம் காண வேண்டும்.இந்த அடையாளம் காணும் பொறுப்பு மக்களிடத்தில் இருக்கும் வரை யார் எந்த திட்டத்தினை கொண்டு வந்தாலும் அதனை முறியடிக்கும் மக்கள் சக்தியாக மக்கள் இருப்பார்கள.;
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எங்களுக்கு கிடைத்த பாக்கியம் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் கிடைத்திருக்காது. ஏன் என்றால் நாங்கள் ஆளும் கட்சி உறுப்பினராக பாராளுமன்றம் சென்றோம.; அரசாங்கத்தினை களவெடுத்து திடீரென எதிர்கட்சியில் உற்கார வைத்துவிட்டார்கள். அதனை தொடர்ந்து மீண்டும் அரசாங்கத்தினை பெற்று இருக்கும் போது, நீங்கள் வாக்களிக்காமலே முன்னாள் உறுப்பினர் ஆக்கி விட்டார்கள்.ஆனால் நீங்கள் எங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி எதனை எதிர்ப்பார்த்தீர்களோ? நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் கூட அதனை செய்து கொண்டு இருக்கிறோம்.இன்று நாங்கள் உங்கள் மத்தியில் வருகிறோம். உங்களுடைய தேவைகளை நிறைவேற்று கிறோம். ஆனால் அமைச்சுப்பதவிகளை எடுத்தவர்கள் எங்கே? என்று கூட தெரியவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள.; ஆனால் தற்போது வலி தான் பிறந்துள்ளது.
ஆயிரம் ரூபா சம்பம் தை பெற்றுத்தருவதாக சொன்னார்கள் ஆனால் தை மார்ச் மாதம் பிறக்கிறதாம்.; ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் ஒரு போதும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால் தற்போது உள்ள முறைக்கமையை மாற்றக் கூடாது.எமது மக்களுக்கு ஆயிரம் ரூபா அல்ல 1500 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முடியும் ஏனென்றால் எமது மக்கள் அந்த அளவுக்கு உழகை;கிறார்கள். ஆகவே இப்போது இருக்கின்ற, கம்பனி முறைமைக்கு கீழாக கூட்டு ஒப்பந்ததிற்கு கீழாக அதனை செய்ய வேண்டும்.கடந்த காலங்களில் போல் திரைமறைவில் ஆடி வந்த நாடகங்களின் அடிப்படையில் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்பது சிரமம் என்பதனை நாங்கள் மாத்திரம் அன்று கம்பனிகளும் அதனை தான் சொல்கின்றன.நாங்கள் எப்படி 1500 பெற்றுக்கொடுப்பதாக சொன்னீர்கள். என்று கூறுகிறார்கள்
. அந்த திட்டம் எங்களிடமிருந்தது சஜித் பிரேமாதாச அவர்கள் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களா மாற்றி அவர்களுக்கு 1500 அல்ல 2000 வரை உழைப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய அளவு பொருளாதாரத்திட்டத்தினை முன்வைத்திருந்தார்.ஆகவே தான் எதிர்வரும் 05 திகதி இந்த சம்பள விடயம் தொடர்பாக விசேட பிரேரணை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ளேன.; அந்த பிரேரணையின் போது தங்களுடைய கருத்துகளை முன் வைக்கட்டும் அங்கு தான் பேசு வேண்டிய சபை அறையில் அல்லவென அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் ராம்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -