பிரதி ஆணையாளராக பதவி உயர்வு பெற்ற எம்.ஐ .பிர்னாஸ் பாராட்டி தனிநபர் பிரேரணையும்; கெளரவிப்பும்



எம்.என்.எம்.அப்ராஸ்-

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற
கல்முனை மாநாகர சபையின் மாதாந்த சபை கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற (23) சபை அமர்வில் கல்முனை மாநகர சபையின் மாநகர செயலாளராக எம்.ஐ .பிர்னாஸ் கடமையாற்றிய நிலையில் அவருக்கு அதே மாநகர சபையில் பிரதி மாநகர ஆணையாளராக பதவி பெற்றதை முன்னிட்டு அவரை பாராட்டி நன்றி தெரிவிக்கும் முகமாக சபை அமர்வின் போது மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் அவர்களினால் தனி நபர் பிரேரணை கொண்டு வரப்பட்டது .


இது தொடர்பாக இங்கு உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர்
அப்துல் மனாப்

இங்கு நான் தனி நபர் பிரேரணையை முன்வைப்பதில் நான்
மகிழ்ச்சியடைகின்றேன் . கல்முனை மாநகர சபையின் செயலாளராக கடமையாற்றிய அவரது கடமையினை மிகத் திறமையாகவும் , வினைத்திறனாகவும் , நேர்த்தியான முறையில் செய்திருந்தார்கள் . இவர் அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக்கொண்ட ஏ.எல்.எம். இஸ்மாயில் ஏ.பீ. பரீதா ஆகியோர்களுக்கு மகனாக பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியினை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலும் , இரண்டாம் மற்றும் உயர் கல்வியினை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் , தேசிய பாடசாலையிலும் கற்று உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் இருந்து தேர்ச்சி பெற்று களனிப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் , தகவல் தொழிநுட்ப விஞ்ஞானமானி பட்டதாரியாக 2010 இல் வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தி எய்து 2012 இல் கீர்த்திமிகு முதன்மைச் சேவையான இலங்கை நிர்வாகச் சேவையில் இளம் நிர்வாக சேவை உத்தியோகத்தராக தன்னை இச்சேவையில் இணைத்துக்கொண்டார் . அதுமட்டுமன்றி தற்போது இவர் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில் இறுதியாண்டு சட்டமானியாக கல்வி பயின்று வருகின்றார் . அவரது சட்டமானி பட்டப்படிப்பினையும் சிறந்த முறையில் பூர்த்தி செய்து எதிர்காலத்தில் அவரது நிர்வாகச் சேவையுடன் இணைந்து சிறந்ததொரு சட்டத்தரணியாகவும் அவர் வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன் . இவர் ஒரு வருட பொதுநிருவாக Diploma பயிற்சியினை பூர்த்தி செய்து 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையில் இருந்து கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளராகவும் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் , கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் பிரதி மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றி வந்த வேளையில் ஏறாவூர் நகர சபையின் விஷேட ஆணையாளராகவும் , தொடர்ந்து எமது

கல்முனை மாநகர சபையின் மாநகர செயலாளராக கடமையாற்றய நிலையில் தற்போது
எமது மாநகர சபையில் பிரதி மாநகர ஆணையாளராக கடமையாற்றிக் கொண்டு வருகின்றார் . மாநகர சபையினுடைய அனைத்து அலுவல்களிலும் தன்னை முழு மூச்சாக இணைத்துக் கொண்டு செயற்பட்டார் . அத்துடன் எமது மாநகர சபையின் நிருவாகக் குழுவினருடனும் , மக்கள் பிரதிநிதிகளான முதல்வர் உறுப்பினர்களுடனும் தனது கடமையினை நடு நிலையாகவும் , பக்கச்சார்பின்றியும் பேணி வந்தார் .

இரு துருவங்களையும் ஒரு நேர்கோட்டில் இணைத்துக் கொண்டு தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார் இவருடைய இப்பயணத்தில் முதல்வர் மற்றும் உறுப்பினர்களால் கோரப்படும் அவர்களுடைய தேவைகளை கேட்டவுடனே நிறைவேற்றி கொடுக்கக்கூடிய ஒருவர் . அதுமட்டுமன்றி அனைவருடனும் ஒரு நட்புறவுடனும் , சகோதரத்துவமுடன் தனது உறவினைப் பேணி பழகக்கூடிய ஒருவர் . எனவே , இவரது பணிகள் தொடர்ந்து சிறப்பான முறையிலும் மேலும் மேலும் இவர் உயர் பதவிகளைப் பெற்று சிறந்ததொரு நிருவாகியாக நீடூழி காலம் வாழ வேண்டும் என தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் சபையில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் உட்பட எனைய உறுப்பினர்கள் இவரின் சேவையை பாராட்டி உரையாற்றியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -