துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
துருக்கி நாடு, புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்பட்டு வருகிறது. அங்கு 1999ம் ஆண்டு ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரியிழந்த வரலாற்று சோகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8.55க்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 6.8 ரிக்டர் புள்ளியாக பதிவானது.

இந் நில நடுக்கத்தால் தியார் பக்கிர், சான்லியர்பா, அடியமான் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.
வீடுகளிலும், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களிலும் இருந்து பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். இதை உள்ளூர் TVகளில் ஒளிபரப்பு செய்தனர்.

தெற்கு அடானா, வடக்கு சாம்சன் மாகாணங்களிலும் இந்த நில நடுக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியது. நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்றன.

இந் நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்தும், 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர்.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, 274 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நில நடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான குழுவினர் மீட்பு மற்றும் தேடுதலுக்காக விரைந்துள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -