திகா உதயா மலையக கல்வி ஊக்குவிப்புத்திட்டம்




நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா- 
பாலர் பாடசாலை மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது

நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச அமைப்பாளர் மு.இராமச்சந்திரனின் தலைமையில் சமர்ஹில் வட்டாரம் கிளவட்டன் விளையாட்டு மைதானத்தில் 07/01/2020 மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழநி திகாம்பரம் அவர்களின் ஆலோனைக்கமைய மலையக கல்வி ஊக்குவிப்பு திட்டம் எனும் தொனிப்பொருளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய எம்.உதயகுமார் தனது சொந்த நிதியில் மேற்படி உபகரணங்கள் வழங்கிவைக்கவுள்ளர்

சமர்ஹில் வட்டாரத்திற்குட்பட்ட காசல்ரி நகர் லெதண்டி, கார்பெக்ஸ், டங்கல், டங்கல் மேல்பிரிவு,காசல்ரி,கிளவட்டன், ஒஸ்போன்,நோட்டன்,மிட்போட் ஆகிய தோட்டங்களில் இயங்கி வரும் பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டவுள்ளதுடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ள கழகங்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது
நிகழ்வில் பிரதேசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைருமான பா.சிவனேசன், நோர்வே பிரதேசபை உறுப்பினர்கள், தொ.தே.ச அட்டன், டிக்கோயா காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -